Saturday, May 30, 2015

Krish Infotech Cuddalore: கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் தகவல்கள்_பகுதி 1

1) உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய..?

ணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? இதையெல்லாம் எப்படி கண்டறிவது?

இதற்கு தான் TinEye என்று ஒரு புதுமையான இணையதளம் உள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளளன என்று விரைவாக தேடித்தரும். உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தின் இணைப்பு கொடுத்ததும் அல்லது உங்கள் கணிப்பொறியில் இருந்து அப்லோட் (upload) செய்தும் தேடலாம். இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது.

இதன் மூலம் தேடுபொறிகளில் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒளிப்படங்களை வினாடிகளில் கண்டுபிடித்து தரும். 

பதிவிறக்கம் செய்ய இணையதள முகவரி :  http://www.tineye.com/

2) 75-க்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறப்பதற்கு Free File Opener மென்பொருள்


கணினியில் பல்வேறு வகையான கோப்புக்களை திறப்பதற்காக தனித்தனியாக மென்பொருட்களை நிறுவியிருப்போம். இதனால் வன்தட்டில்(Hard Disk) இடம் வெகுவாக குறைவடைவதோடு ஒன்றிற்கு மேற்பட்ட மென்பொருட்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதானல் பிரதான நினைவகத்தின்(RAM) அளவும் குறைவடைகின்றது. இதனால் உங்கள்  கணினியின் வேகம் குறைவடைய வாய்ப்புள்ளது.

இப்பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு மிகவும் உதவியாக உள்ள மென்பொருளே Free File Opener ஆகும். இதில் 75ற்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறக்க முடியும். 

25MB அளவுடைய இம்மென்பொருள் மூலம் பின்வரும் கோப்பு வகைகளை திறக்க முடியும்.

Code Files (.vb, .c, .cs, .java, .js, .php, .sql, .css, .aspx, .asp)
Web Pages (.htm, .html)
Photoshop Documents (.psd)
Images (.bmp, .gif, .jpg, .jpeg, .png, .tif, .tiff)
XML Files (.resx, .xml)
PowerPoint Presentations (.ppt, .pptx, .pps)
Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv, .3gp, .flac)
Microsoft Word Documents (.doc, .docx)
SRT Subtitles (.srt)
RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)
Icons (.ico)
Open XML Paper (.xps)
ML Paper (.xps)
Torrent (.torrent)
Flash Animation (.swf)
Archives (.7z, .gz, .jar, .rar, .tar, .tgz, .zip)
Rich Text Format (.rtf)
Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)
Apple Pages (.pages)
Microsoft Excel Documents (.xls, .xlsm, .xlsx)
Comma-Delimited (.csv)
Outlook Messages (.msg)
PDF Documents (.pdf)
vCard Files (.vcf)
EML Files (.eml)

பதிவிறக்கம் செய்ய இணையதள முகவரி : http://www.freefileopener.com/

நன்றி: இணையம்

With Regards,

Sunday, May 17, 2015

இன்டர்நெட்டில் "WWW" என்றால் என்ன?

இன்டர்நெட் இல்லை என்றால் பூமியே சுத்தாது என்று சொல்லும் அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்று விட்டது.இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை எதற்கெடுத்தாலும் இன்டர்நெட் தான், அதுவும் சமூக வலைத்தளங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.


பிரிட்டிஷ் கணினி விஞ்ஞானியும், முன்னாள் செர்ன்(CERN) ஊழியருமான டிம் பெர்னர்ஸ் லீ மற்றும் பெல்ஜிய கணனி விஞ்ஞானி ராபர்ட் கயில்லியவ் இவர்கள் தான் இணையத்தை கண்டுபிடித்தவர்களாக கருதப்படுகிறது.

1989ம் ஆண்டில் டிம் பெர்னர்ஸ் லீ உலகளாவிய வலைக்கு முதல் கட்ட திட்ட அமைப்பை எழுதினார். இது முதலில் செர்ன்(CERN) தகவல் பறிமாற்றத்திற்காக மட்டுமே எழுதப்பட்டது.

ஆனால் இது உலகளவில் சென்றடைய வேண்டும் என்பதை உணர்ந்த பெர்னர்ஸ், 1990ல் ராபர்ட் உடன் இணைந்து மேம்படுத்தப்பட்ட உலகளாவிய வலையமைப்பை உருவாக்கினார்.

இணையம்(Internet) மற்றும் உலகளாவிய வலை(WWW) ஆகிய சொற்கள் பேச்சு வழக்கில் பெரிதும் வேறுபாடின்றி அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.

இருப்பினும், இணையமும் உலகளாவிய வலையும் ஒன்றல்ல.

இணையம் என்பது உலகளாவிய தரவுத் தகவல்தொடர்பு முறைமையாகும். வலை என்பது இணையத்தின் வழியாகத் தொடர்புகொள்ளும் சேவைகளில் ஒன்றாகும்.

இது மிகை இணைப்புகள் மற்றும் URLகள் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற வளங்களின் தொகுப்பாகும். சுருக்கமாக, வலை என்பது இணையத்தில் இயங்கும் ஒரு பயன்பாடு என்றே சொல்லலாம்.

நன்றி: இணையம்

 With Regards,