கணினி துறையில் முடி சூட மன்னனாக விளங்கிவரும் மைக்ரேசாப்ட் தனது முதல் இயங்குதளமான எம்.எஸ் விண்டோஸ் 1 கடந்த 1985 ஆண்டு வெளியிட்டது. தற்போது சரியாக 25 ஆண்டுகள் அதாவது கால்நூற்றாண்டு பிறகு விண்டோஸ் 10 இயங்குதளத்தை வெளியிட்டுள்ளது.இந்த 25 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி அபரிமிதமானது.
எனினும் அதன் முந்தைய வெளியீடான விண்டோஸ் 8 எதிர்பார்த்த அளவு வாடிக்கையாளர்களை கவரவில்லை.
எனவே உடனடியாக ஒரு புதியதை வெளியிட்டாக வேண்டிய கட்டாயத்தில் விண்டோஸ் 10 வெளிவந்துள்ளது.
எனினும் அதன் முந்தைய வெளியீடான விண்டோஸ் 8 எதிர்பார்த்த அளவு வாடிக்கையாளர்களை கவரவில்லை.
எனவே உடனடியாக ஒரு புதியதை வெளியிட்டாக வேண்டிய கட்டாயத்தில் விண்டோஸ் 10 வெளிவந்துள்ளது.
கடந்த யூலை 29ம் திகதி வெளியிடப்பட்ட விண்டோஸ் 10 வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளியிடப்பட்ட 24 மணித்தியாலங்களில் 1 கோடிக்கு அதிகமானவர்கள் இந்த இயங்குதளத்தை பயன்படுத்தி இருப்பதே இதற்கு சாட்சி.
சரி விண்டோஸ் 10ன் முக்கிய அம்சங்களை பார்ப்போம்:
விண்டோஸ் 7ல் இருந்தது போன்று ஸ்டார்ட் மெனுவை (Start Menu) சிறிதாக மீண்டும் கொண்டுவந்துள்ளது.
மேலும் இதில் இண்டர்நெட் எக்ஸ்புலோரருக்கு (Internet Explorer) பதிலாக கோர்டானா (Cortana) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக உங்கள் தேடல் எளிமையாக இருக்கும்.
ஒரே நேரத்தில் நான்கு அப்ளிகேசன் வரை பயன்படுத்தலாம்.
எக்ஸ்புலோரருக்கு மாற்றாக எட்ஜ் பிரவுசர்(Edge Browser) இணைக்கப்பட்டுள்ளது. இதன் அதிவேக பிரவுசர் மூலம் உங்கள் நேரம் மிச்சப்படும்.
விளையாட்டு பிரியர்களுக்காகவே எஸ் பாக்ஸ் (X BOX) செயலியும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சிறந்த கேமிங் அனுபவத்தை பெறலாம். சாதாரண கணினியை மட்டுமின்றி தொடுதிரை வசதியுள்ள சாதனங்களையும் மனதில் வைத்து இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்பை (Watsapp)கணனியில் பயன்படுத்தும் வகையில் வாட்ச் அப் வெப் என்ற சேவையை கொண்டுவர முடிவு செய்துள்ளது.
மேலும் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்தி வந்தவர்கள் இலவசமாக விண்டோஸ் 10க்கு தரம் உயர்த்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மொத்தமாக பார்த்தால் இதன் முந்தைய பதிப்பான விண்டோஸ் 8 (8.1) விட பல சிறப்பு வசதிகளுடனும் விண்டோஸ் 10 களமிறங்கியுள்ளது.